Monday, January 19, 2009

டயரி படுத்தும் பாடு


ஆரம்பிச்சாலும் ஆரம்பிச்சுது நியூ இயர். டயரி குமிய ஆரம்பிச்சிட்டுது.முதலிலெல்லாம் நாம டயரி தீவிரமா எழுத துடிச்ச போது ஒன்னும் ஒசியில பேராது.



நாலஞ்சு வருஷமா வர்ர மொத டயரிய நம்ம மகர் கைலாஷ்க்கு கொடுத்துரது. அவரும் தீவிரமா முத பத்து நாள் முனைஞ்சு எழுதுவார். என்ன விஷயம் இருக்கும்னு நினைக்கிறீங்க? அன்னைக்கி வாசல்ல இருக்கிற ஆறடி பிட்ச்சிலே ஒன்றரை உழக்கு பையனோட 240ரன் எடுத்ததா எளுதியிருப்பான். அதிலே 20 சிக்ஸர் 30 four-னு எளுதியிருப்பான். இதுல எப்பவாது ஞாயிற்றுக்கிழமை வீட்டுல இருந்தா அப்பா வாப்பா வாப்பான்னு 4 மணியிலிருந்தே அரிக்க ஆரம்பிச்சுடுவான். அன்னிக்கி டயரில அப்பா ஆறாவது பந்திலே 4ரன்னுக்கு அவுட்னு எழுதியிருப்பான்.ஒரு தரம் நம்ம தங்கை பையனும் கைலாஷோட குருவுமான விக்னேஷ் லால்குடி வந்திருந்தபோது கைலாஷை நிக்க வச்சு 980ரன் எடுத்துட்டான். பாவம் பையன் நொந்து பூட்டான். சாயந்திரம் நான் ஆபீசிலிருந்து வந்தவுடன் சொன்னான். ஊர் மானத்தையே வாங்கிட்டியேடான்னேன்.ஒரு ஞாயிற்றுக்கிழமை இப்படித்தான் வாப்பா கிரிக்கெட் விளையாடன்னு கைலாஷ் நச்சரிக்க நம்ம சகதர்மிணியம்மா புவனா சப்போர்டுக்கு வந்துட்டா.அவளுக்கு என்னமோ நான்தான் ஏபிடி அனுமார் மாதிரி பேங்கையே தாங்கறேன்னு நெனைப்பு. அப்படி ஒரு buildup நாம கொடுத்து வச்சிருக்கோம்ல. பாவம்டா அப்பா. இன்னிக்கி ஒரு நாள்தான் ரெஸ்ட். ரொம்ப தொந்தரவு பண்ணாதேன்னா. பையன் மூஞ்சி அப்படியே தொங்கி போச்சு. உடனே நான் பையன்கிட்ட கேட்டேன். மச்சி காலையல ஹிண்டு பேப்பர் பாக்கலயா. அதுல sports pageல Ace cricketer Muralidharan hangs his boots.Announces retirement from first class cricketனு வந்திருக்குன்னு சொன்னேன். பய அவ்வளவுதான் வெறியாய்ட்டான். கைலாஷுக்கு இன்னும் மனசுக்குள்ள என்ன வருத்தம்னா நான் அவனோட கிரிக்கெட்டிங் டேலன்டை மதிக்கலைன்னு. கொஞ்சம் கோச்சிங் கீச்சிங்னு போயிருந்தா நிச்சயம் இண்டியன் டீமுக்கு செலக்ட் ஆயிருப்போம்னு நெனப்பு. டென்டுல்கருக்கு சமதையான ப்ளேயர் நாம. இந்தாள் இப்படி நம்ம கேரியரையே ஸ்பாயில் பண்ணிட்டான்னு நெனப்பு.



போன வாரம் சிங்கப்பூர்ல செட்டிலாய்ட்ட நம்ம தம்பி மகர் பத்து வயசு ஹரீஷ்ட்ட பேசலாம்னு கூப்ட்டாக்க நான் ரொம்ப டயர்டா இருக்கேன்னான். ஏன்டான்னாக்க. சாயந்திரம் ஒரு சைனாக்காரப்பையனை நிக்க வச்சு 152ரன் எடுத்தேன் அதாங்கறான். அப்பிடி போடு அருவாளை. அண்ணன் அஞ்சடி பாய்ஞ்சா தம்பி பத்தடி பாயரான்யா. போடா வருங்கால சிங்கப்பூர் கிரிக்கெட் கேப்டன் நீதான்டான்னு சொன்னேன். பையன் அப்படியே சிலுத்து போய்ட்டான் பெரியப்பாவோட தீர்க்கதரிசனத்தை நெனச்சு. ஆறு வயசு வரைக்கும் அம்மண குண்டியாய் அலைஞ்ச பயலுவல்லாம் என்னா குதி குதிக்கறான் பாருய்யா. மேலே உள்ள போட்டோவில் உள்ளவர்தான் ஹரீஷ்.லால்குடியில் இவர் பேட்டிங் பிடிக்கும்போது க்ளீன் போல்ட் தவிர ஏனைய அவுட்டுகளை எளிதில் ஏற்றுக்கொள்வதில்லை.அப்படியே முதல் ஆறெழு பந்தில் அவுட்டானால் ட்ரையல் அல்லது நோ பால் என்பார்.இது குறித்து நடக்கும் பஞ்சாயத்தின் போது ஆறு செவுத்துக்கு அப்புறம் உள்ள பாத்ரூமிலிருந்து தாத்தா வெளியே வந்து ஆமாம் நான் பார்த்தேன்.நோ பால்தான் என்று பேரன் மனம் குளிர தீர்ப்பு சொல்வது வழக்கம்.அதே போல பேட்டிங் பிடித்து முடித்தவுடன் ஹரிஷுக்கு அசாத்திய கால்வலி வந்து பீல்டிங்கை புறக்கணிப்பது வழக்கம்.மீண்டும் அவர் பாட்டிங் டர்ன் வந்ததும் கால் வலி பறந்தோடிவிடுவது வழக்கம்.



பையன் கைலாஷ் டயரில என்னதான் எழுதிருக்கான்னு சும்மா படிச்சுப் பாத்துட்டு பேச்சு வாக்கில எதையாவது அதிலிருக்கறதை மறதியாய் சொல்லிட்டோம்னா போச்சு. நீ படிச்சுட்ட. நீ எதுக்கு என் டயரிய படிச்சன்னு பெரிய ரகளை உட்டுருவான். என்னமோ ராணுவ ரகசியங்களெல்லாம் வெளியாயிட்ட மாதிரி. இந்த வருஷம் அய்யா 10th CBSE board எக்ஸாம் எழுதறார். கௌண்ட் டவுன் டு போர்டு எக்ஸாம்-னு டயரி டெய்லி எழுதறார். பாப்போம் என்ன மார்க் வாங்கறார்னு. நாம படிச்சதை விட நல்லாதான் படிக்கிறார். ஆனா பொது அறிவு மாத்திரம் கொஞ்சம் கம்மி. நண்பர் சேகர்ட்ட பேசிக்கிட்டிருக்கும்போது சொன்னேன் இன்னும் அப்பாவுக்கு முழுத் திருப்தியா படிக்கிற பையன் உலகத்திலே பிறக்கலைனு.

Bitter Half புவனா ஒவ்வொரு வருஷமும் எல்லா நல்ல டயரியயும் பையன்கிட்டயே கொடுத்துடறீங்க. எனக்கும் ஒன்னு கொடுங்கன்னு தாண்டு தாண்டுன்னு தாண்டினாள். சரின்னு கொடுத்தேன். பின் ஒரு நாள் என்ன எழுதியிருக்கிறாள் என்று பிரட்டிப்பார்த்தால் ஒரே பண்ணாத சமையல் குறிப்புகள் மற்றும் எப்போதும் போடப்போகாத கோலங்கள் அப்புறம் அவ friend-டோட நாத்தனாரோட பக்கத்து வீட்டுக்காரியோட பேத்தி அட்ரஸ்.அந்த டயரி இதுக்காகவா நான் பொறந்தேன்னு என்னப்பாத்து அழுத மாதிரி இருந்தது. அப்புறம் யாரோ கொடுத்த ஒரு சமையல்கார மாமியின் போன் நம்பர். தெவசத்திற்க்கு சமைக்க ஒரு மாமி தேவைப்பட்டு அந்த நம்பருக்கு ஒரு தடவை போன் பண்ணியபோது பேசியவர் அந்த மாமி போய் நாலு திவசம் கூட ஆயிடுத்தே என்றார். வீட்டுல இன்னொரு குழந்தை இல்லையே என்ற கவலையே வேண்டாம்.அம்மாவும் பையனுமே அடிச்சிக்கும்க. புடவைய மடிச்சுக் கட்டாத கொறதான்.


சிறு வயதில் எழுத ஒரு டயரி கிடைக்காத ஒரு ஆபீஸ் நண்பர் இப்போது வாடிக்கையாளர்களுக்கு டயரிகளாக விசிறியடித்துக் கொண்டிருக்கிறார்.ஆனால் அவருக்கு இப்போது டயரி எழுத நேரமில்லை.

3 comments:

  1. யாம் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறுக அப்படின்னு, வந்த டயரி எல்லாத்தையும் மத்தவங்க கிட்ட தள்ளி விட்டுட்டேன்.

    ஒரு காலத்தில ஒரே ஒரு டயரி கிடைக்காதான்னு கடை வாசல்ல ( சின்ன கடை வீதி வழியாக ஸ்கூல் போகும்போது) ஏக்கமா பார்த்ததுண்டு. இது சம்பந்தமா ஒரு கட்டுரையே வரையற அளவுக்கு விஷயம் வெச்சிருக்கேன். அது அப்புறம் ஒரு நாள்.

    பின்னாளில் அது கிட்டியபோது தன் விவரத்தை தவிர வேறு எவ்விவரத்தையும் எழுதவில்லை.

    கிரிக்கெட் அப்படின்ன உடனே சின்ன வயசில (பேப்பர் பால் கட்டில் கட்டை வெச்சு ) சின்ன பையன நிக்க வெச்சு நொங்கெடுத்த ஞாபகம் வரலியா.

    ReplyDelete
  2. தங்களது சிறு வயது கிரிக்கெட் அனுபவங்கள் குறித்த எனது எண்ணம்.
    அது ஒரு துன்பியல் சமாச்சாரம்.

    ReplyDelete
  3. /ஆனால் அவருக்கு இப்போது டயரி எழுத நேரமில்//

    நேரமில்லை என்பதை விட விருப்பமில்லை யாருக்கும்

    ReplyDelete