Sunday, March 7, 2010

போலிச்சாமியாரும் சன் டிவியும்சமீபத்தில் தமிழகத்தில் பெரும் எழுச்சியை உண்டாக்கிய சன் டிவி-யின் நித்யானந்த சாமிகள் [ சாமிகள் என்ற அடைமொழி இனியும் தேவையா? ] பள்ளியறைக் காட்சி ஒளிபரப்பு எனக்கு நித்யானந்தா செய்ததை விட சன் டிவி ஒளிபரப்பிய விதமே எரிச்சலை தந்தது. இது போன்ற காட்சிகளை படம் பிடிக்க அங்கங்கே ஆட்களை புகுத்தும் ஒரு கும்பல் படப்பிடிப்பு முடிந்தவுடன் சம்பத்தப்பட்ட நபரிடம் பெருந்தொகை கேட்டு மிரட்டுகிறது. பேரம் படியாவிட்டால் ஏதாவது தொலைக்காட்சி சேனலுக்கு அந்த படப்பிடிப்பு சிடியை விற்றுவிடுவதும் அதை வாங்கும் தொலைக்காட்சி சேனல் அந்தக் கண்றாவியை ஒளிபரப்பி தன் ரேட்டிங்கை எகிற வைப்பதும் தெரிந்ததுதான். சினிமாக்களுக்கெல்லாம் A, UA சர்டிபிகேட் தர ஒரு சென்சார் போர்டு இருப்பது போல தொலைகாட்சி சேனல்களுக்கு இல்லாதது சன் டிவி போன்றவர்களுக்கு ரொம்ப வசதியாகப் போய்விட்டது. இது மாதிரி ஏதாவது ஒளிபரப்ப கிடைத்தால் சன் டிவிக்கு குஷிதான். ராத்திரி 10மணிக்கு காமிக்கப் போறதுக்கு காத்தால 6மணியிலிருந்தே கத்த ஆரம்பிச்சுடுவான். “ பிரபல சாமியாரின் கிளுகிளுப்பூட்டும் படுக்கையறைக் காaaaaட்சிகள். பிரபல நடிகையும் சிக்கினார். இன்று இரவு 10மணிக்கு காணத்தவறாதீர்கள்” னு கூவுவான். இதுல நடுவுல சான்ஸ் கிடச்சா விளம்பரம் போடப்பாப்பான் கேடுகெட்ட ஹிந்துஸ்தான் லீவர். விளம்பர இடைவேளைக்குப் பிறகு சாமிகளின் லீலைகள் தொடரும்னு சொல்லுவான். ஒரு விஷயத்தில் சன் டிவி-யை பாராட்ட வேண்டும். குப்பை படத்தைக் கூட கத்தியே ஓட வச்சிடுவான். திருட்டு விசிடி எடுத்தவனுக்குக் கூட நஷ்டத்தை கொடுத்த முதல் படம் ஜக்குபாய். அந்த ஜக்குபாயைக் கூட “ இந்திய தொல்லைக்காட்சி வரலாற்றிலேயே திரைக்கு வந்து சில மணி நேரங்களே ஆன புத்தம்புது தமிழ்த் திரைப்படம் ஜக்க்க்க்கூகூகூகூபாஆஆய்”னு கத்தியே காசு பாத்துடுவான். தமிழ்நாட்டு மக்கள் 90சதவீதம் பேர் ஒரு நாளைக்கு ஒரு தடவையேனும் சன் டிவி-யை பாத்துடறான். அரசு கொடுத்த இலவச டிவியால் பெரும்பலன் சன் டிவிக்குதான். சன் டிவி உதவி இல்லாமல் இனி தமிழ்நாட்டில் ஒரு கட்சி ஆட்சிக்கு வருவது கஷ்டம்தான். அந்த அளவிற்கு மக்கள் அதோடு ஒன்றிப் போய்விட்டனர். நித்து ஒளிபரப்புக்குப் பின் அதோட ஷேர் விலை ரூபாய் ஏறிட்டதாய் புரோக்கர் சொன்னார். ஜக்குபாய் இணயதளத்தில் வெளியான பிறகு சரத்குமார் கருணாநிதியை சந்தித்து புலம்பியதாகவும் அதற்கு அவர் கவலைப்படாம படத்தை ரீலிஸ் பண்ணு. நான் வேணா படம் ஆரமிக்கரத்துக்கு முன்னாடி பத்து நிமிஷம் பேசறேன்னு சொன்னாராம். படத்தை விட அது இன்னும் கொடுமை. இவர் எழுதிய பெருச்சாளியின் ஓசைக்கு கிடைத்த லட்சக்கணக்கான பணத்தில் ஒரு பகுதியை ஏழைக் குழந்தைகளின் படிப்புக்கு செலவழிக்கிறாராம். எந்த தயாரிப்பாளர் ஐந்து நாள் கூட ஓடாத ஒரு படத்தின் வசனகர்த்தாவுக்கு லட்சக்கணக்கில் பணம் கொடுக்கிறானோ? அப்படின்னா நடிகர்கள் மற்றும் பிற பணியாளர்களுக்கு எவ்வளவு கொடுத்திருப்பான்? எவ்வளவு நஷ்டப்பட்டிருப்பான்? காதுல பூ சுத்தரானுங்க. இந்த பணம்லாம் யாருதுன்னு நமக்கு தெரியாதா? இவர்கள் தப்பான வழியில் சம்பாதித்த பணத்தை படம் எடுத்து தானும் நஷ்டப்பட்டு மக்களையும் கஷ்டப்படுத்துகிறார்கள். சன் டிவிக்கோ கலைஞர் டிவிக்கோ தைரியம் இருந்ததால் ஒரு தீபாவளிக்கோ அல்லது பொங்கலுக்கோ அவங்க டிவில உளியின் ஓசையைப் போடச்சொல்லுங்க பாப்போம். ஒரு பய பாக்கமாட்டான். கையில் கிடைத்த படத்தையெல்லாம் தாறுமாறாக விமர்சனம் செய்யும் எழுத்துலக விபச்சாரி சாரு நிவேதிதா போன்றவர்கள் ஏன் உளியின் ஓசை போன்ற படங்களுக்கு விமர்சனம் எழுதுவதில்லை?

சாமியார்கள் சும்மா இருக்கும்போதே அர்ச்சனை செய்யும் கருணாநிதி நித்யானந்தா ஒளிபரப்பின் மூலம் சன் டிவி ஏதோ லஷ்மணன் கோட்டை தாண்டிவிட்டதைப் போல் நீலிக்கண்ணீர் வடிக்கிறார். ஒரு வேளை படம் கலைஞர் டிவிக்கு கிடைக்காமல் சன் டிவிக்கு கிடைத்துவிட்டதே என்ற கடுப்பாயிருக்கும்.

நித்யானந்தா சமாச்சாரத்திற்குப் பிறகாவது மக்கள் சாமியார்கள் பின்னால் செல்வதைக் குறைக்க வேண்டும். இந்த மாதிரி மார்க்கட்டு [read as market] போன நடிகைகளுடன் கெட்ட காரியங்கள் செய்வதை விட சாமியார்கள் பேசாமல் கல்யாணம் செய்து கொள்வது உத்தமம். இதில் சம்பத்தப்பட்ட நடிகை முன்னால் நடித்த படங்களில் கிடைத்த புகழை விட இந்தப் படத்தில் அதிகம் சம்பாதித்துவிட்டார். இது போன்ற ஈன காரியங்களைச் செய்வதை விட பேசாமல் இந்த சாமியார்கள் கல்யாணம் செய்து கொண்டு இறைப்பணியில் ஈடுபடலாம். வைஷ்ணவ சம்பிரதாயத்தில் ஜீயர் ஸ்வாமிகள் இல்லற வாழ்க்கையில் ஈடுபட்டுக்கொண்டு இறைப்பணியும் செய்கிறார்கள். அது போல் சைவ சம்பிரதயத்திலும் செய்ய வேண்டியதுதான். இல்லையென்றால் இது போன்ற போலி சாமியார்களால் சமயத்திற்கு இழுக்கு வந்துவிடும். நித்யானந்தாவிற்கு ரெண்டாயிரம் கோடி சொத்தாம். ஏண்டா இப்படி பணத்தை என்ன பண்றதுன்னு தெரியாம இப்படிப் பட்ட ஆட்கள்கிட்ட கொட்றிங்க. இதோ ஒரு நல்ல விஷயத்துக்காக தமிழ்ச்செல்வன் பணம் அனுப்ப சொல்லியிருக்கார். நண்பர் நாகநாதன் மூலமா எனக்கு தெரிய வந்தது. முடிஞ்சா இதுக்கு பணம் அனுப்பு. புண்ணியமாப் போவும்.

http://satamilselvan.blogspot.com/2009/10/blog-post.html


என்னைப் பொறுத்தவரையில் வாழ்க்கையில் காஞ்சி மஹாப்பெரியவர் சந்திரசேகர சரஸ்வதி சாமிகளைத் தவிர வேறு எவரையும் சாமியாராக ஏற்றுக்கொண்டதில்லை. உணவு பழக்க வழக்கம் உட்பட எல்லாவற்றிலும் ஒரு எளிமையைக் கடைபிடித்து வாழும் கடவுளாக இருந்தார். இனியாவது இந்த மாதிரியான போலி சாமியார்கள் பின்னால் போய் பணத்தை வீணடிக்காமல் நல்ல புத்தகங்களை வாங்கிப் படித்து உபயோகமாக நேரத்தை மக்கள் கடத்தலாம்.

“புவனா, வாழ்க்கையே வெறுத்துப் போச்சு.பேசாம சாமியாராப் பூடலாம்னு பாக்கறேன்” னு பொண்டாட்டிக் கிட்ட சொன்னேன்.

“ சும்மா அலையாதீங்க ” ன்னு அவ சொல்லிட்டா
.

4 comments:

 1. ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸஸஸப்பா... ஏன் இத்தனை காரம்?

  (பத்திகளை இன்னும் சிறிது சிறிதாக பிரிக்கவும்)

  ReplyDelete
 2. சில நம்பிக்கைகளும் எதிர்பார்ப்புகளும் பொய்த்துப் போகும்போது இப்படி கோபம் வருவது இயற்கைதான். அதிலே எண்ணையை ஊற்றுவது போல் இது போன்ற் சன் டிவி நடவடிக்கைகள் இன்னும் எரிச்சலூட்டும். எனக்கென்ன தோன்றியது என்றால் இந்த மீடியாக் காரங்க செத்த பொணத்திலே ஆரம்பிச்சு எல்லாத்துலேயும் காசு பார்த்துடுவாங்க. அநீதியைக் கண்டு கோபம் கொள்றதுக்குப் பதிலா எரிச்சல ஏற்படுத்தி விடுகிறார்கள். அதனாலத்தான் இலங்கைத் தமிழர்கள் மீது ஏற்படவேண்டிய சாதரண மனிதாபிமானம் கூட இங்குள்ள தமிழர்கள் மனதிலே ஏறபடாமல் போய்விட்டது. நல்ல வேளை எங்க வீட்ல டிவி கட். உபயம் இந்துவோட +2 தேர்வுகள். இவங்க எந்த செய்தி போட்டாலும் அதன் உண்மைத் தன்மையைத் தெரிந்து கொள்வதற்குப் பதிலா அந்த செய்தியால இவங்களுக்கு எவ்வளவு லாபம் என்று கணக்குப் போடத் துவங்குகிறோம். அந்த அளவுக்கு மீடியா (both electronic and print media)தரம் தாழ்ந்து போய்ட்டாங்க. உங்களின் இடுகையின் கடைசி பன்ச் அவங்களோட பதில் தான். அவங்க நன்றாக சாமியார்களையும் உங்களையும் புரிந்து வைத்திருக்கிறார்கள். உங்க மேடத்திற்கு என்னோட பெண்கள் தின நல்வாழ்த்துக்களைச் சொல்லுங்க. நாகநாதன். கே

  ReplyDelete
 3. அஞ்சா நஞ்சன்March 11, 2010 at 3:46 PM

  பெரும்பாலானோரின் குமுறல்களை வெளிப்படுத்தி உள்ளீர்கள். நன்றி ..

  ReplyDelete
 4. தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

  இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

  அன்புடன்
  www.bogy.in

  ReplyDelete