Friday, February 7, 2014

தங்க மீன்கள்-திரை விமரிசனம்


திருமண நாள் வெள்ளிக்கிழமை அமைந்ததும் விடுமுறைக்கு வாய்ப்பு இல்லாததும் கொண்டு முன்னதாகவே இயக்குநர் ராம் மீது நம்பிக்கை வைத்து சத்யத்தில் `தங்க மீன்கள்` படத்திற்கு சனிக்கிழமை மதியக் காட்சிக்கு முன் பதிவு செய்திருந்தேன். ராம் ஏமாற்றவில்லை. குழந்தைகளின் வெளிப்படையான எண்ணங்கள் பேச்சுகள் வாயிலாக படத்தின் முக்கிய காட்சிகள் நகர்வது மனதை மயிலிறகால் வருடுவது போன்ற உணர்வைத் தருகிறது.படம் வந்த இரண்டாம் நாளே நிறைய இருக்கைகள் காலியாக இருந்தது இது போன்ற பட முயற்சிகளுக்கு நம் மக்கள் தரும் வரவேற்பை வெளிச்சம் போட்டு காட்டியது.பட ஆரம்பத்தில் வரும் குளம் தங்கமீன் குறித்த உரையாடல் கடைசி வரை சாதனா எங்கேயாவது யாரும் பார்க்காத ஒரு தருணத்தில் குளத்தில் இறங்கி விடுவாளோ என்ற பயத்தை உண்டாக்குகிறது. சாதனாவின் கண்களில் தெரியும் ஒளி மற்றும் நடிப்போரை அருகாமையில் [ closeup] காண்பிப்பதும் அருமை. w m குழப்பம் வரும் போது` tare zamin per`போன்ற படமோ என்று சந்தேகம் எழுகிறது.தமிழ்நாட்டில் பெரும்பாலான தனியார் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் குழந்தைகள் மற்றும் அவர்கள் பெற்றோர்களிடம் நடந்து கொள்ளும் விதத்தை ராம் தோலுரித்துக் காட்டியுள்ளார்.
நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு நல்ல திரை இசைப் பாடலை கேட்ட திருப்தி `ஆனந்த யாழை மீட்டுகிறாய்`பாட்டின் மூலம் எழுகிறது. யுவன் சங்கர் ராஜாவிற்கு நன்றி.

அம்மா இன்னிக்கு பூரி பண்ணுவதால் தங்க மீனாக மாறுவதை தள்ளிப்போடும் சாதனாவின் தோழிதான் என்னைக் கவர்ந்த கள்ளி.ஜன்னலின் அருகில் சாதனாவும் பூரிக்குட்டியும் நிகழ்த்தும் உரையாடல் தூள்.பட முடிவில் மூன்றாம் பரிசு வாங்கும் மாணவனுக்கு தோழி கை தட்டுவது ஏன் என்பதற்கு `அவன் மத்யானம் டிபனுக்கு பூரி கொண்டு வந்திருகான்ல?`என்று பூரிக்குட்டி சொன்னதும் என் கண்ணின் ஓரத்தில் வழிந்த கண்ணீரை புவனாவுக்குத் தெரியாமல் துடைத்துக்கொண்டேன். எனக்கும் பூரி என்றால் இஷ்டம் என்பதாலோ?
டிவி-ல வரதை எல்லாம் நாம வாங்கி கொடுக்க முடியுமா என்று தங்கை கேட்கும்போது அப்பா அவன் வசதியுள்ளவர்களுக்கு மட்டும்னு போட வேண்டியதுதானே என்று ராம் சொல்வது இயலாமையின் உச்சத்தை காட்டுகிறது.

படத்தின் பெரிய சொதப்பல்கள் 1.டீச்சர், அவர் கணவர், ராம் வரும் காட்சி. பொருந்தா திருமணமோ என்று குழப்பத்தை கொடுத்து சொதப்புகிறது.2. ராம் தேவையில்லாமல் மலையில் தொங்குவது.3.Fort Cochin-ல் காட்ட பல இடங்கள் இருந்தும் சைனீஸ் நெட்டை மாத்திரம் காண்பித்து ஏமாற்றுவது.

குழந்தை சாதனா நிறைய விருதுகள் வாங்கப்போவது நிச்சயம். ராமின் சோதனை முயற்ச்சிகள் தொடரட்டும்.


No comments:

Post a Comment